ஐபிஎஸ் போலீஸ் அதிகாரிகள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் தமிழக அரசு நள்ளிரவு 39 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்ட அரசாணையின் விவரம் வருமாறு: (பழைய பணியிடம் அடைப்புக் குறிக்குள்)
- டிஜிபி சுனில் குமார் – மனித உரிமை கமிஷன் (சீருடை பணியாளர் தேர்வாணையம்)
- ஏடிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம் – தொழில்நுட்பப் பிரிவு (மதுரை போலீஸ் கமிஷனர்)
- ஏடிஜிபி ஏ.கே.விஸ்வநாதன்- ஏடிஜிபி operation (சென்னை போலீஸ் கமிஷனர்)
- ஏடிஜிபி எம்.ரவி – ஈரோடு சிறப்பு அதிரடிபடை (பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு)
- ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் -சென்னை போலீஸ் கமிஷனர் (மாநில செயலாக்க பணிகள்)
- ஐஜி ஜெயராம் – திருச்சி மண்டல ஐஜி (சென்னை தலைமையகம்)
- ஐஜி அமல்ராஜ்- சென்னை தலைமையக கூடுதல் கமிஷனர் ( திருச்சி மண்டல ஐஜி)
- ஐஜி கணேஷ் மூர்த்தி – சென்னை பொருளதார குற்றப்பிரிவு (பொது)
- ஐஜி தினகரன் – சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் (சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர்)
- ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா- மதுரை போலீஸ் கமிஷனர் (சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர்)
- ஐஜி அருண் – சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் (போக்குவரத்து கூடுதல் கமிஷனர்)
- ஐஜி சஞ்சய் குமார் – தொழில் நுட்பப் பிரிவு (திருப்பூர் போலீஸ் கமிஷனர்)
- டிஐஜி லோகநாதன் பதவி உயர்வு பெற்று திருச்சி ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார் (தஞ்சாவூர் டிஐஜி)
- கபில் குமார் சரத்கர் பதவி உயர்வு பெற்று சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். (வடசென்னை இணை கமிஷனர்)
- உள்நாட்டு பாதுகாப்பு டிஐஜியாக இருந்த கண்ணன், ஐஜியாக பதவி உயர்வு பெற்று சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- விழுப்புரம் சரக டிஐஜியான சந்தோஷ்குமார், ஐஜியாக பதவி உயர்வு பெற்று சென்னை நிர்வாக பிரிவுக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
- காஞ்சிபுரம் டிஜஜியான தேன்மொழி, ஐஜியாக பதவி உயர்வு பெற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- கோவை சரக டிஐஜியான கார்த்திகேயன், ஐஜியாக பதவி உயர்வு பெற்று திருப்பூர் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- திண்டுக்கல் சரக டிஐஜியான ஜோஷி நிர்மல்குமார், பதவி உயர்வு பெற்று எஸ்டாபிளிஸ்பென்ட் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
- கடலோர பாதுகாப்பு பிரிவு டிஐஜியான பவானீஸ்வரி, ஐஜியாக பதவி உயர்வு பெற்று சென்னை பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
- திருச்சி சரக டிஐஜியான பாலகிருஷ்ணன், சென்னை வடக்கு மண்டல இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனர் விஜயகுமார், கடலோர பாதுகாப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
- சென்னை தலைமையக இணை கமிஷனரான ஏ.ஜி பாபு, சென்னை தெற்கு மண்டல இணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
- சென்னை தெற்கு மண்டல இணை கமிஷனரான மகேஷ்வரி, தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
- சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனரான எழிலரசன், விழுப்புரம் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஆயுதப்படை டிஐஜி செந்தில்குமாரி, சென்னை தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்..
- மதுரை சரக டிஐஜி ஆனி விஜயா, திருச்சி சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சென்னை நிர்வாக பிரிவு டிஐஜி நரேந்திரன் நாயர் கோவை சரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்..
- ராமநாதபுரம் டிஐஜி, ரூபேஷ்குமார் மீனா தஞ்சை டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- எஸ்.பிஅபிஷேக் தீட்சீத், டிஐஜியாக பதவி உயர்வு பெற்று மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
- சிபிசிஐடி எஸ்.பி மல்லிகா, டிஐஜியாக பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
- காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி சாமுண்டீஸ்வரி, பதவி உயர்வு பெற்று காஞ்சிபுரம் டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சென்னை வணிக குற்றப் புலனாய்வு பிரிவு எஸ்.பி லட்சுமி, பதவி உயர்வு பெற்று சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
- சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி ராஜேஸ்வரி பதவி உயர்வு பெற்று சென்னை ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
- சீருடை பணியாளர் தேர்வாணைய எஸ்.பி பாண்டியன் பதவி உயர்வு பெற்று ரயில்வே டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
- சென்னை பூக்கடை துணை கமிஷனராக பணியாற்றிய ராஜேந்திரன் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று மதுரை சரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
- சென்னை அண்ணாநகர் துணை கமிஷனர் முத்துச்சாமி டிஐஜியாக பதவி உயர்வு பெற்று திண்டுக்கல் சரகத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.
- சென்னை தெற்கு போக்குவரத்து இணை போலீஸ் கமிஷனரான மயில்வாகணன், டிஐஜியாக பதவி உயர்வு பெற்று ராமநாதபுரத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
- சென்னை பாதுகாப்பு பிரிவு துணை கமிஷனரான ராதாகிருஷ்ணன், விழுப்புரம் எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்..