4 கோடி பழைய வாகனங்கள் பயன்பாட்டில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழலை பாதுகாக்க பழைய வாகனங்களை படிப்படியாக அழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதல்கட்டமாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் பழைய வாகனங்களின் புள்ளிவிவர பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதன்படி நாடு முழுவதும் 15 ஆண்டுகள் பழைமையான 4 கோடி வாகனங்கள் உள்ளன. மிக அதிகபட்சமாக கர்நாடகாவில் 70 லட்சம் பழைய வாகனங்கள் உள்ளன. தமிழகத்தில் 33.43 லட்சம் பழைய வாகனங்கள் ஓடுகின்றன.
பழைய வாகனங்களை அழித்துவிட்டு புதிய வாகனங்கள் வாங்குவோருக்கு வாகன விலையில் 5 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என்று மத்திய அரசு அண்மையில் அறிவித்தது நினைவுகூரத்தக்கது.