முதல்வரின் தனிச் செயலர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

முதல்வரின் தனிச் செயலர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக தொல்லியல் துறை ஆணையராக பணியாற்றிய உதயசந்திரன், தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் மேலாண் இயக்குநர் உமாநாத், அருங்காட்சியகங்கள் ஆணையர் சண்முகம், தொழில் துறை ஆணையர் அனு ஜார்ஜ் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனிச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது மு.க.ஸ்டாலின் ப்லவேறு பகுதிகளின் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான புகார்களை பெற்றுக் கொண்டார். ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்று அவர் உறுதி அளித்தார். இதற்காக உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அந்த புதிய துறையின் அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *