கொரோனா விதிகளை மீறிய 4 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த 6-ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி மளிகை, காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் மட்டும் பகல் 12 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதர கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை பள்ளிக்கரணையில் கார் உதிரி பாக விற்பனையகம், கார் விற்பனையகம், கொட்டிவாக்கத்தில் கார் விற்பனையகம், கொடுங்கையூரில் பழைய பேப்பர் கடை ஆகியவை கடந்த வியாழக்கிழமை செயல்பட்டது தெரியவந்தது. அந்த 4 கடைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் பெரம்பூரில் திறக்கப்பட்டிருந்த நகைக் கடைக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது.