தமிழக கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சியை சேர்ந்த ஆர்.ராதாகிருஷ்ணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் அவர் தமிழக கோயில்களுக்கு சொந்தமான 47,000 ஏக்கர் நிலங்கள் மாயமாகி உள்ளது. அந்த நிலங்கள் எங்கே? அவற்றை தேடி கண்டுபிடிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 5-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.