ரேஷனில் இலவசமாக 5 கிலோ கொண்டை கடலை

ரேஷனில் இலவசமாக 5 கிலோ கொண்டை கடலை வழங்கப்பட உள்ளது.

கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக ஜூலை முதல் நவம்பர் வரையிலான 5 மாதங்களுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ வீதம் 5 கிலோ கொண்டை கடலை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டது.

இதன்படி மத்திய அரசின் தொகுப்பில் இருந்து கொண்டை கடலை கொள்முதல் செய்யப்பட்டு வருகிற டிசம்பர் மாதம் முதல் ரேஷன் கடைகளில் 5 கிலோ கொண்டை கடலை இலவசமாக வழங்கப்பட உள்ளது. 

முன்னுரிமை பெற்ற குடும்ப அட்டைகள், அந்தியோதயா அன்னயோஜனா ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொண்டை கடலை வழங்கப்படும் என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிக கழகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *