5 கிலோ இலவச உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல்

ஐந்து கிலோ இலவச உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல் செய்யப்பட்டுள்ளன. இதன்காரணமாக லட்சக்கணக்கானோர் வேலையிழந்து பரிதவித்து வருகின்றனர்.

இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு சார்பில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 2 மாதத்துக்கு 5 கிலோ உணவு பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அறிவித்தார். இந்த திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த புதன்கிழமை ஒப்புதல் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *