சென்னை மாநகர பஸ்களில் 50% இருக்கைகளில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மே 6-ம் தேதி முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. இதன்படி சென்னை மாநகர பஸ்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.
பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். முகக்கவசம் அணியாதவர்கள் பஸ்களில் ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள். தனி மனித இடைவெளியை பயணிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.