சென்னை மெட்ரோ ரயில்களில் 50% இருக்கைகளில் பயணிக்க அனுமதி

சென்னை மெட்ரோ ரயில்களில் 50% இருக்கைகளில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மே 6-ம் தேதி முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. இதன்படி சென்னை மெட்ரோ ரயில்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

இதற்காக மெட்ரோ ரயில்களின் இருக்கைகளில் X என்ற குறியீடு இருக்கும். அந்த இருக்கைகளில் அமரக்கூடாது. பயணிகள் நின்றபடி பயணம் செய்ய அனுமதி கிடையாது. கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பயணிகளின் சமூக இடைவெளி கண்காணிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *