ஆயுத பூஜைக்கு 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் வரும் 25-ம் தேதி ஆயுத பூஜையும் 26-ம் தேதி விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. வரும் 24-ம் தேதி சனிக்கிழமையாகும்.
எனவே தொடர்ந்து 3 நாட்களுக்கு விடுமுறை வருகிறது. வரும் 23-ம் தேதியே பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
இதை கருத்தில் கொண்டு ஆயுத பூஜைக்கு 500 சிறப்பு பஸ்களை இயக்க தமிழ்நாடு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
பொதுமக்கள் முன்பதிவு மையங்கள் அல்லது www.tnstc.in என்ற இணையதளத்தில் டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று போக்குவரத்துத் துறை மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வரி விதிப்பு விவகாரம் காரணமாக தமிழகத்தில் இதுவரை ஆம்னி பஸ்கள் இயக்கப்படவில்லை.
ஆயுத பூஜைக்கு முன்பாக ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டால் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.