51 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் 25 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 51 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


தமிழக காவல் துறையில் மூத்த அதிகாரிகள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்யப்படுகின்றனர். அதன்படி சில நாட்களுக்கு முன்பு சென்னை போலீஸ் கமிஷனர் உட்பட 39 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.


இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் 25 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 51 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.


அடையாறு துணை கண்காணிப்பாளர் பகலவன், கரூர் மாவட்ட எஸ்.பியாகவும் மாதவரம் துணை கண்காணிப்பாளர் ரவாலி பிரியா திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.யாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


நாகர்கோவில் உதவி காவல் கண்காணிப்பாளர் ஜவஹர், சென்னை அண்ணா நகர் துணை கண்காணிப்பாளராகவும் வள்ளியூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் தி.நகர் துணை கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *