ஒரே பள்ளியில் 56 மாணவிகளுக்கு கொரோனா

ஒரே பள்ளியில் 56 மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையில் அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை வகுப்புகள் நடந்து வருகிறது. 1,100 மாணவிகள் கல்வி கற்று வந்தனர். மாணவி ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது.

அந்த மாணவிக்கும், அவருடன் படிக்கும் சக மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. கடந்த 11-ம்தேதி 20 மாணவிகளுக்கு கொரோனா உறுதியானது.  இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மேலும் 36 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஆசிரியர் ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் கண்டுபிடித்து பரிசோதனை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *