விரட்டும் கொரோனா.. மிரட்டும் உயிர்பலி.. ஒரே நாளில் 56,282 பேருக்கு தொற்று..40,000-ஐ தாண்டியது மரணம்

மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் நாடு முழுவதும் ஒரே நாளில் 56 ஆயிரத்து 282 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பி 19 லட்சத்து 64 ஆயிரத்து 537 ஆக உயர்ந்துள்ளது.


இதில் 13 லட்சத்து 28 ஆயிரத்து 336 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 5 லட்சத்து 95 ஆயிரத்து 501 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 904 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 40 ஆயிரத்து 699 ஆக உயர்ந்திருக்கிறது.


கடந்த 8-வது நாளாக புதிய கொரோனா தொற்று அரை லட்சத்தை தாண்டி பதிவாகி உள்ளது. சில நாட்களில் அமெரிக்காவைவிட இந்தியாவில் புதிய தொற்று அதிகமாக உள்ளது.
வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் புதிதாக 10 ஆயிரத்து 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஹைதராபாத் மருத்துவமனையில் கொரோனாவுக்கு எதிராக போரிடும் டாக்டர்கள்.
ஹைதராபாத் மருத்துவமனையில் கொரோனாவுக்கு எதிராக போரிடும் டாக்டர்கள்.

இதன் மூலம் அந்த மாநிலத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 68 ஆயிரத்து 265 ஆக உயர்ந்துள்ளது. மிக அதிகபட்சமாக 16 ஆயிரத்து 476 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் நேற்று 5 ஆயிரத்து 175 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 73 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
3-வது இடத்தில் உள்ள ஆந்திராவில் நேற்று 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 8 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

மும்பை மருத்துவமனையில் கொரோனா நோயாளிக்கு பிஸியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மும்பை மருத்துவமனையில் கொரோனா நோயாளிக்கு பிஸியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது.


நான்காவது இடத்தில் உள்ள கர்நாடகாவில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. அந்த மாநிலத்தில் நாள்தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று ஏற்படுகிறது.
உத்தர பிரதேசத்தில் வைரஸ் தொற்று ஒரு லட்சத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. மேற்குவங்கத்தில் ஒரு லட்சத்தை நெருங்கி வருகிறது.

பிஹார், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களிலும் வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது.
கேரளாவில் நேற்று ஆயிரத்து 195 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் 29,151 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 17,533 பேர் குணமடைந்துள்ளனர். 11 ஆயிரத்து 492 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 94 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *