தமிழகத்தில் மேலும் 5,795 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழக சுகாதாரத் துறை இன்று மாலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில், மாநிலம் முழுவதும் ஒரே நாளில் 5 ஆயிரத்து 795 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் தமிழகத்தில் ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 3 லட்சத்து 55 ஆயிரத்து 449 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2 லட்சத்து 96 ஆயிரத்து 171 பேர் குணமடைந்துள்ளனர். 53 ஆயிரத்து 155 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 116 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 6,123 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டவாரியாக சென்னையில் 1,186 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 394, திருவள்ளூரில் 393, செங்கல்பட்டில் 315, சேலத்தில் 295, தேனியில் 288, காஞ்சிபுரத்தில் 257, கடலூரில் 238, விருதுநகரில் 225, வேலூரில் 175, திருநெல்வேலியில் 151, ராணிபேட்டையில் 146, தஞ்சாவூரில் 114, மதுரையில் 109, புதுக்கோட்டையில் 105, தூத்துக்குடியில் 99 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.