ஒரே நாளில் 57,982 பேருக்கு கொரோனா..

மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்ட புள்ளி விவரத்தில் நாடு முழுவதும் ஒரே நாளில் 57 ஆயிரத்து 982 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 47 ஆயிரத்து 664 ஆக உயர்ந்துள்ளது. இதில் 19 லட்சத்து 19 ஆயிரத்து 843 பேர் குணமடைந்துள்ளனர். 6 லட்சத்து 76 ஆயிரத்து 900 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நாடு முழுவதும் ஒரே நாளில் 941 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 50 ஆயிரத்து 921 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிராவில் புதிதாக 11 ஆயிரத்து 111 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.

கொரோனா வார்டில் படுக்கைகளை கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்தும் சுகாதார ஊழியர்கள்.

அந்த மாநிலத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 95 ஆயிரத்து 865 ஆக உயர்ந்துள்ளது. இதில் 4 லட்சத்து 17 ஆயிரத்து 123 பேர் குணமடைந்துள்ளனர். ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 395 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 288 பேர் உயிரிழந்தனர்.

இதன்மூலம் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்து 37 ஆக உயர்ந்துள்ளது.
ஆந்திராவில் நேற்று 8,012 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் இதுவரை 2,89,829 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இதில் 1,98,339 பேர் குணமடைந்துள்ளனர். 85,945 பேர் சிகிச்சையில் உள்ளனர். 2,650 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவில் நேற்று 7 ஆயிரத்து 40 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 966 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது.

3 ஆயிரத்து 947 பேர் உயிரிழந்துள்ளனர்.கேரளாவில் நேற்று 1,530 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் 44,415 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 28,878 பேர் குணமடைந்துள்ளனர். 15,310 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை 156 பேர் உயிரிழந்துள்ளனர்.உத்தர பிரதேசம், மேற்குவங்கம், பீகார் மாநிலங்களில் வைரஸ் தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *