தமிழகத்தில் 5,890 பேருக்கு கொரோனா.. 120 பேர் பலி…

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 890 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 120 பேர் உயிரிழந்துள்ளனர்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அடிப்படையில் மத்திய சுகாதாரத் துறை பட்டியல் வெளியிடுகிறது.

மாவட்டவாரியான கொரோனா நோயாளிகள் பட்டியல்
மாவட்டவாரியான கொரோனா நோயாளிகள் பட்டியல்

அதன்படி தேசிய அளவிலான வைரஸ் பாதிப்பில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 890 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 3 லட்சத்து 43 ஆயிரத்து 945 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 2 லட்சத்து 83 ஆயிரத்து 937 பேர் குணமடைந்துள்ளனர். 54 ஆயிரத்து 122 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 120 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் ஓட்டுமொத்த உயிரிழப்பு 5 ஆயிரத்து 886 ஆக உயர்ந்துள்ளது.

காரைக்குடி மருத்துவமனை கொரோனா வார்டில் சுகாதார பணியாளர்களிடம் சற்ரு தொலைவில் இருந்து பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

மாவட்டவாரியாக சென்னையில் ஆயிரத்து 185 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கோவையில் 393, கடலூரில் 390, திருவள்ளூரில் 308, தேனியில் 278, சேலத்தில் 268, செங்கல்பட்டில் 224, கன்னியாகுமரியில் 209, விருதுநகரில் 212, காஞ்சிபுரத்தில் 174,.புதுக்கோட்டையில் 164, ராணிபேட்டையில் 151, தென்காசியில் 147, மதுரையில் 136, விழுப்புரத்தில் 138, ஈரோட்டில் 137, திருச்சியில் 121, தஞ்சாவூரில் 113, திருநெல்வேலியில் 100, திருவண்ணாலையில் 77, அரியலூரில் 76, தூத்துக்குடியில் 75 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *