தமிழகத்தில் 5,890 பேருக்கு கொரோனா

தமிழக சுகாதாரத் துறை இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில் மாநிலம் முழுவதும் ஒரே நாளில் 5 ஆயிரத்து 890 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் தமிழகத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 26 ஆயிரத்து 245 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 2 லட்சத்து 67 ஆயிரத்து 015 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 53 ஆயிரத்து 716 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 117 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் ஒட்டு மொத்த உயிரிழப்பு 5 ஆயிரத்து 514 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டவாரியாக சென்னையில் 1187 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  சென்னையில் 6-வது நாளாக ஆயிரத்துக்கும் கீழாக தொற்று பதிவாகி உள்ளது. , திருவள்ளூரில் 495, செங்கல்பட்டில் 437, தேனியில் 367, காஞ்சிபுரத்தில் 315, ராணிப்பேட்டையில் 178, பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *