தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 950 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 125 பேர் பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் நாள்தோறும் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுகிறது.

தமிழக சுகாதாரத் துறை இன்று மாலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்து 950 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 3 லட்சத்து 85 ஆயிரத்து 55 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2 லட்சத்து 78 ஆயிரத்து 270 பேர் குணமடைந்துள்ளனர். 54 ஆயிரத்து 213 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஒரே நாளில் 125 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 5 ஆயிரத்து 766 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டவாரியாக சென்னையில் ஆயிரத்து 196 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் சென்னையில் புதிய வைரஸ் தொற்று ஆயிரத்துக்குள்ளாக கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
தற்போது மீண்டும் புதிய தொற்று ஆயிரத்தை தாண்டியுள்ளது. திருவள்ளூரில் 488, செங்கல்பட்டில் 436, வேலூரில் 264, தேனியில் 205, புதுக்கோட்டையில் 197, மதுரையில் 121, திருச்சியில் 104 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.