தமிழகத்தில் 5975 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் 5975 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் அடிப்படையில் மத்திய சுகாதாரத் துறை பட்டியல் வெளியிட்டு வருகிறது.

மகாராஷ்டிரா முதலிடம்

இதன்படி தேசிய அளவிலான வைரஸ் பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் புதிதாக 14 ஆயிரத்து 492 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதுவரை 6 லட்சத்து 71 ஆயிரத்து 942 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 4 லட்சத்து 80 ஆயிரத்து 114 பேர் குணமடைந்துள்ளனர். ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 833 பேர் சிகிச்சை பெறுகின்றனர். ஒரே நாளில் 297 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 21 ஆயிரத்து 995 ஆக உயர்ந்துள்ளது.

இரண்டாவது இடத்தில் உள்ள ஆந்திராவில் இன்று 7 ஆயிரத்து 895 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 3 லட்சத்து 50 ஆயிரத்து 216 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இதில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 192 பேர் குணமடைந்துள்ளனர். 89 ஆயிரத்து 742 பேர் சிகிச்சை பெறுகின்றனர். 3 ஆயிரத்து 282 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகா 3-வது இடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் புதிதாக 7 ஆயிரத்து 330 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 2 லட்சத்து 71 ஆயிரத்து 876 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 5,975 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 5975 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதில் ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 568 பேர் குணமடைந்துள்ளனர். 82 ஆயிர்தது 693 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 4 ஆயிரத்து 615 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகம் 4-வது இடம்

தேசிய அளவிலான வைரஸ் பாதிப்பில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. தமிழக சுகாதாரத் துறை இன்று மாலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் 5 ஆயிரத்து 975 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 3 லட்சத்து 79 ஆயிரத்து 385 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 லட்சத்து 19 ஆயிரத்து 327 பேர் குணமடைந்துள்ளனர். 53 ஆயிரத்து 541 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மாநிலம் முழுவதும் இன்று ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 6 ஆயிரத்து 517 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டவாரியாக சென்னையில் இன்று 1,298 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கோவையில் 392 பேர், கடலூரில் 380 பேர், திருவள்ளூரில் 354 பேர்,

செங்கல்பட்டில் 352 பேர், சேலத்தில் 261 பேர், காஞ்சிபுரத்தில் 222 பேர்,கன்னியாகுமரியில் 181 பேர், வேலூரில் 180 பேர், திண்டுக்கல்லில் 178 பேர், தேனியில் 170 பேர்,

விழுப்புரத்தில் 160 பேர், திருநெல்வேலியில் 158 பேர், ராணிபேட்டையில் 155 பேர், புதுக்கோட்டையில் 155 பேர்,
தென்காசியில் 140 பேர், தஞ்சாவூரில் 116 பேர்,

மதுரையில் 105 பேர் திருவண்ணாமலையில் 100 பேர், திருச்சியில் 97 பேர், காரைகுறிச்சியில் 93 பேர், தூத்துக்குடியில் 91 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *