தமிழகத்தில் 5,980 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று 5,980 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத் துறை இன்று மாலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில், மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்து 980 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.


இதன்மூலம் ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 3 லட்சத்து 73 ஆயிரத்து 410 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3 லட்சத்து 13 ஆயிரத்து 280 பேர் குணமடைந்துள்ளனர். 53 ஆயிரத்து 710 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஒரே நாளில் 80 பேர் பலி

மாநிலம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் 23 பேரும், அரசு மருத்துவமனைகளில் 57 பேரும் உயிரிழந்தனர்.

ஒட்டுமொத்தமாக இன்று ஒரே நாளில் 80 பேர் உயிர்பலியாகி உள்ளனர். அவர்களையும் சேர்த்து தமிழக உயிரிழப்பு 6 ஆயிரத்து 420 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டவாரியாக சென்னையில் 1,294 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டு ஆயிரத்துக்கும் கீழாக குறைந்திருந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு காய்ச்சல் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று முன்தினம் நல்லகண்ணு குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு காய்ச்சல் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று முன்தினம் நல்லகண்ணு குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார்.

ஆனால் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக புதிய வைரஸ் தொற்று ஆயிரத்துக்கும் மேலாக பதிவாகி வருகிறது. இன்று புதிய தொற்று 1,300-ஐ நெருங்கியுள்ளது.

செங்கல்பட்டில் 406 பேருக்கு தொற்று

செங்கல்பட்டில் 406 பேரும், கோவையில் 389 பேரும், திருவள்ளூரில் 384 பேரும், கடலூரில் 309 பேரும், சேலத்தில் 288 பேரும், காஞ்சிபுரத்தில் 257 பேரும், வேலூரில் 244 பேரும், புதுக்கோட்டையில் 154 பேரும், தேனியில் 144 பேரும்,
திருநெல்வேலியில் 140 பேரும், தென்காசியில் 137 பேரும், விழுப்புரத்தில் 133 பேரும், திண்டுக்கல்லில் 129 பேரும், திருச்சியில் 120 பேரும், தூத்துக்குடியில் 120 பேரும், ஈரோட்டில் 117 பேரும், தஞ்சாவூரில் 109, கன்னியாகுமரியில் 108 பேரும் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரையில் 96, ராணிப்பேட்டையில் 93, திருவண்ணாமலையில் 97, நாகப்பட்டினத்தில் 81, திருவாரூரில் 75, திருப்பத்தூரில் 73, திருப்பூரில் 70, சிவகங்கையில் 60 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

மகாராஷ்டிரா முதலிடம்

தேசிய அளவிலான வைரஸ் பாதிப்பில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் 6 லட்சத்து 57 ஆயிரத்து 450 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 4 லட்சத்து 70 ஆயிரத்து 873 பேர் குணமடைந்துள்ளனர். ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 879 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 21 ஆயிரத்து 698 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திரா 2-வது இடத்தில் உள்ளது. அங்கு 3 லட்சத்து 34 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா 3-வது இடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் 2 லட்சத்து 64 ஆயிரம் பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

4-வது இடத்தில் தமிழகம்

கடந்த சில வாரங்களாக தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்து 73 ஆயிரத்து 410 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

ஆந்திரா, கர்நாடகாவைவிட தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால் தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்து 13 ஆயிரத்து 280 பேர் குணமடைந்துள்ளனர். 53 ஆயிரத்து 710 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். நோயாளிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன் பாளையம் கொரோனா மருத்துவ மையத்தில் நோயாளிகளுடன் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று பேசினார். அப்போது நோயாளிகளுக்கு அவர் பல்வேறு அறிவுரைகளை கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *