தமிழகத்தில் 6.1 கோடி வாக்காளர்கள்

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதன்படி தமிழகத்தில் 6 கோடியே 10 லட்சத்து 44 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.

இதில் ஆண் வாக்காளர்கள் 3 கோடியே ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 370 பேர் உள்ளநர். பெண் வாக்காளர்கள் 3 கோடியே 9 லட்சத்து 25 ஆயிரத்து 603 பேர் உள்ளனர். மூன்றாம் பாலின வாக்காளர்கள் 6 ஆயிரத்து 385 பேர் உள்ளனர்.  வாக்காளர் பட்டியல் விவரங்களை elections.tn.gov.in இணையத்தில் தெரிந்து கொள்ளலாம். 

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய நவ. 21, 22, டிச.12, 13-ம் தேதிகளில் அந்தந்த வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *