ஒரே நாளில் 63,489 பேருக்கு கொரோனா.. 944 பேர் பலி.. 26 லட்சத்தை நெருங்கியது தொற்று…

இந்தியாவில் இன்று ஒரே நாளில் 63,489 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 26 லட்சத்தை நெருங்கியுள்ளது. ஒரே நாளில் 944 பேர் உயிரிழந்தனர்.

ஒட்டுமொத்த உயிரிழப்பு 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.கடந்த 7-ம் தேதி முதல் தொடர்ந்து 60,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது. கடந்த 11-ம் தேதி மட்டும் 53 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டது.

இன்றும் புதிய வைரஸ் தொற்று 60 ஆயிரத்தை தாண்டியது.
மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில், “நாடு முழுவதும் ஒரே நாளில் 63 ஆயிரத்து 489 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி மருத்துவமனையின் கொரோனா வார்டில் பணியாற்றும் நர்ஸ்.
டெல்லி மருத்துவமனையின் கொரோனா வார்டில் பணியாற்றும் நர்ஸ்.

இதன்மூலம் இந்தியாவின் ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 25 லட்சத்தை 89 ஆயிரத்து 62 ஆக உயர்ந்துள்ளது. இதில் 18 லட்சத்து 62 ஆயிரத்து 258 பேர் குணமடைந்துள்ளனர். 6 லட்சத்து 77 ஆயிரத்து 444 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நாடு முழுவதும் ஒரே நாளில் 944 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 49 ஆயிரத்து 489 ஆக உயர்ந்துள்ளது.
தேசிய அளவிலான கொரோனா வைரஸ் பாதிப்பில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

அந்த மாநிலத்தில் புதிதாக 12 ஆயிரத்து 614 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அங்கு 5 லட்சத்து 84 ஆயிரத்து754 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இதுவரை 19 ஆயிரத்து 749 பேர் உயிரிழந்துள்ளனர்.ஆந்திராவில் நேற்று 8,732 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது.

டெல்லி அருகே நொய்டாவில் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்ய தயாராக காத்திருக்கும் நர்ஸ்கள்.
டெல்லி அருகே நொய்டாவில் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்ய தயாராக காத்திருக்கும் நர்ஸ்கள்.

அந்த மாநிலத்தில் இதுவரை 2,81,817 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 1,88,222 பேர் குணமடைந்துள்ளனர். 88,138 பேர் சிகிச்சையில் உள்ளனர். 2,562 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகாவில் நேற்று 8 ஆயிரத்து 818 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.

தலைநகர் பெங்களூருவில் மட்டும் 3 ஆயிரத்து 495 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. கர்நாடகாவில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 926 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இதில் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 811 பேர் குணமடைந்துள்ளனர். 81 ஆயிரத்து 276 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 3 ஆயிரத்து 831 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 287 பேரும், மேற்குவங்கத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 358 பேரும், பிஹாரில் 98 ஆயிரம் பேரும், தெலங்கானாவில் 90 ஆயிரத்து 259 பேரும், குஜராத்தில் 76 ஆயிரத்து 480 பேரும், அசாமில் 74 ஆயிரத்து 501 பேரும் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *