முகக்கவசம் அணியாத 7 லட்சம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அனைத்து தரப்பு மக்களும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முகக்கவசம் அணியாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி முதல் இதுவரை 7 லட்சம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளது.