கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிய பிசிஆர் பரிசோதனை நடத்தப்படுகிறது. இதற்கான கருவிகள் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. இதன்காரணமாகவே சில மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரிசோதனை குறைவாக உள்ளது என்று கூறப்படுகிறது.
அமெரிக்கா, ஜெர்மனி, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழக அரசு கொரோனா பரிசோதனை கருவிகளை இறக்குமதி செய்து வருகிறது. அந்த வரிசையில் தென்கொரியாவில் இருந்து 10 லட்சம் பிசிஆர் பரிசோதனை கருவிகளை வாங்க தமிழக அரசு ஆர்டர் செய்துள்ளது.
இதில் 7 லட்சம் கருவிகள் தமிழகம் வந்துள்ளன. அடுத்த 4 வாரங்களில் மீதமுள்ள கருவிகள் வந்து சேரும் என்று தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.