சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். இதன்பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.”கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிகளை மக்கள் சுயக் கட்டுப்பாட்டுடன் கடைபிடிக்க வேண்டும்.
தேசிய அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் 8-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 5.29 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதாவது 18 வயதுக்கு மேற்பட்ட 67 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்னும் 10 நாட்களில் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும்” என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.