70 சிறப்பு ரயில்கள் ரத்து

தெற்கு ரயில்வே சார்பில் 70 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் தெற்கு ரயில்வே சார்பில் இதுவரை 70-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த ரயில்களில் இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் பணம் திரும்ப செலுத்தப்படும். டிக்கெட் எடுத்தவர்கள் முன்பதிவு மையங்களில் பணத்தை திரும்ப பெறலாம். எனினும் கூட்ட நெரிசலை தவிர்க்க முண்டியடிக்க வேண்டாம். அடுத்த 6 மாதங்கள் வரை பணத்தை திரும்ப பெறலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *