73 வயதிலும் நடத்தையில் சந்தேகம் மனைவியை கொன்று கணவர் தற்கொலை

சென்னை தாம்பரத்தை அடுத்த புதுபெருங்களத்தூர் விவேக்நகர் 5-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஜெகநாதம் (73). ஜெனரேட்டரை பழுதுபார்க்கும் வேலையை செய்து வந்தார். இவரின் மனைவி சுலோச்சனா(62). இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன். மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. மகன் மோகன்பாபு அமெரிக்காவில் வசித்து வருகிறார். ஜெகநாதமின் 2-வது மகள் உஷா, புதுபெருங்களத்தூரில் குடியிருந்து வருகிறார்.

ரத்த வெள்ளத்தில் சுலோச்சனா


பெருங்களத்தூா் பகுதியில் நேற்று பெய்த மழை காரணமாக மொட்டை மாடியில் காயப்போட்டிருந்த துணிகளை எடுக்க ஒருவர் சென்றனர். அப்போது ஜெகநாதம் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், ஜெகநாதமின் மனைவி சுலோச்சனாவிடம் தகவலைத் தெரிவிக்க வீட்டுக்குச் சென்றார். கதவு திறந்திருந்ததால் உள்ளே சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் சுலோச்சனா இறந்துகிடந்தார்.
ஜெகநாதமின் 2-வது மகள் உஷாவுக்கும் அவரின் கணவர் சற்குணனனுக்கும் அவர் தகவல் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தனர். பின்னர், பீர்க்கன்கரணை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சுலோச்சனா, ஜெகநாதம் ஆகியோரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டுக்குள் ஆய்வு செய்தபோது ரத்தக்கறை படிந்த கத்தி கழிவறையில் கிடந்தது. அதன்அருகே இருந்த பக்கெட்டிலிருந்த தண்ணீர் ரத்தமாக காட்சியளித்தது.
சுலோச்சனாவைக் கொலை செய்த ஜெகநாதம், கத்தியை பக்கெட் தண்ணீரில் கழுவியுள்ளார். பின்னர்தான் அவர் தற்கொலை செய்துள்ளார் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மனைவி மீது சந்தேகம்


கொலை, தற்கொலை குறித்து போலீசார் விசாரித்தபோது, ஜெகநாதமிற்கு சில நாள்களாக மனநல பாதிப்பு இருந்துள்ளது. அதனால் மனைவி சுலோச்சனாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு வந்துள்ளார். இந்தச் சமயத்தில் சுலோச்சனா போனில் பேசினால், யாருடன் பேசுகிறாய் என்று சந்தேகப்பட்டு சண்டைபோடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இந்த வயதில் என்னை உன் அப்பா சந்தேகப்படுகிறார் என்று மகள்களிடம் சுலோச்சனா வேதனைப்பட்டு வந்துள்ளார். அதனால் மனைவி மீதான சந்தேகத்தால் அவரைக் கொலை செய்த ஜெகநாதம், போலீஸிக்குப் பயந்து தற்கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *