தமிழகத்தில் 7-ம் கட்ட ஊரடங்கு தொடக்கம்

தமிழகத்தில் 7-ம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்குகிறது. இந்த மாதம் முழுவதும் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும்.

அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வில்லாத ஊரடங்கு அமல் செய்யப்படும். அதன்படி ஞாயிற்றுக்கிழமைகளில் மளிகை கடைகள் கூட செயல்பட அனுமதிக்கப்படாது.


ஊரடங்கு காலத்தில் திருமண விழாக்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்கலாம். இறுதிச் சடங்கில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம். மாநிலம் முழுவதும் அரசு, தனியார் பஸ் சேவை வரும் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

வெளி மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *