வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க,திருத்தம் செய்ய 9.22 லட்சம் பேர் விண்ணப்பம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க,  திருத்தம் செய்ய இதுவரை 9.22 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

“கடந்த பிப்ரவரி 14-ம் தேதி முதல் ஆன்லைன் மூலமாகவும் நேரிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய இதுவரை 9.22 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் பெயர் சேர்க்க 2.44 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். 

பெயர்களில் திருத்தம் செய்ய 4.98 லட்சம் பேரும் பெயர்களை நீக்க 1.82 லட்சம் பேரும், முகவரி மாற்றம் செய்ய 31,938 பேரும் விண்ணப்பித்துள்ளனர்” என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 

நவம்பர் 16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதன்பின் டிசம்பர் 15-ம் தேதி வரை பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்தம் செய்வது உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடைபெறும். சிறப்பு முகாம்களும் நடத்தப்பட உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *