வங்கிகளில் தங்கத்துக்கு 90% கடன்

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் டெல்லியில் வியாழக்கிழமை நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
” வங்கிகள், நிதி நிறுவனங்களில் தங்கத்தின் மதிப்பில் 75% அளவுக்கு நகைக்கடன் வழங்கப்படுகிறது.

gold

இதனை 90 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். வரும் 2021 மார்ச் 31-ம் தேதி வரை இந்த திட்டம் அமலில் இருக்கும். இதன் மூலம் நாட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும். தற்போதைய வட்டி விகிதங்களில் எவ்வித மாற்றமும் இல்லை.

பழைய நடைமுறை தொடரும்” என்று ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்தார்.
வீட்டுக் கடன் தவணை நிறுத்திவைப்பு திட்டம் நடப்பு ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைகிறது.

இதனை நீட்டிப்பது குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே வரும் செப்டம்பரில் இருந்து வீடு, வாகன கடன் தவணை வசூலிக்கப்படும் என்று தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *