இந்தியாவில் கொரோனாவுக்கு 93 டாக்டர்கள் பலி

இந்தியாவில் கொரோனாவுக்கு இதுவரை 93 டாக்டர்கள் உயிரிழந்துள்ளனர்.


இதுகுறித்து இந்திய மருத்துவ கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ரஞ்சன் சர்மா கூறியதாவது:


நாடு முழுவதும் கொரோனா வைரஸுக்கு எதிராக டாக்டர்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவுக்கு இதுவரை 93 டாக்டர்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்து 279 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இதில் 771 டாக்டர்கள் 35 வயதுக்கு உட்பட்டவர்கள். 247 டாக்டர்கள் 50 வயதுக்கு உட்பட்டவர்கள். 261 பேர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்.


டாக்டர்களின் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.


இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *