ஓட்டுநர் உரிமம், பர்மிட் புதுப்பிக்க ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ், பர்மிட் போன்ற ஆவணங்களின் செல்லுபடி காலத்தை மத்திய போக்குவரத்து துறை பல்வேறு கட்டங்களாக நீட்டித்து வருகிறது. இந்த அவகாசம் மார்ச் இறுதியுடன் நிறைவடைகிறது.
தற்போது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட போக்குவரத்து ஆவணங்களை புதுப்பிக்கும் அவகாசத்தை வரும் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.