முத்திரைத் தாள் வாங்க ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
முத்திரைத் தாள் வாங்குவதில் மோசடியை தடுக்க விற்கப்படும் முத்திரைத் தாள் குறித்த விவரங்கள் பதிவுத் துறை இணையதளத்தில் பதிவு செய்யப்படுகின்றன. மேலும் முத்திரைத் தாள் வாங்கவோர் ஆதார் உள்ளிட்ட அடையாள சான்றுகளை அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆதார் உள்ளிட்ட அடையாள சான்று எண்கள் பதிவுத் துறை இணையத்தில் உள்ளீடு செய்யப்படுகின்றன. எனவே புதிதாக முத்திரைத் தாள் வாங்குவோர் ஆதார் உள்ளிட்ட அடையாள சான்றுடன் செல்ல வேண்டும். உரிமம் பெற்ற விற்பனையாளர்களிடம் முத்திரை தாள்களை வாங்குவது பாதுகாப்பானது என்று பதிவுத் துறை மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.