சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையின் இன்று தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உறையாற்றினார்.
“நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
கரோனா வைரஸால் இக்கட்டான சூழ்நிலை எழுந்துள்ளது.
இந்த வைரஸுக்கு எதிராக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஊழியர்கள், போலீஸார், பாதுகாப்புப் படை வீரர்கள் தங்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல் தன்னலமின்றி சேவையாற்றி வருகின்றனர்.

‘தற்சார்பு இந்தியா’ என்ற கனவை நனவாக்க 130 இந்தியர்களும் உறுதிமொழி ஏற்க வேண்டும். இந்த கனவு தற்போது 130 கோடி இந்தியர்களின் தாரக மந்திரமாக மாறியுள்ளது.
இந்திய மக்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. லட்சியத்தை அடையும் வரை அவர்கள் ஓய மாட்டார்கள்.
உலகை வழிநடத்தக்கூடிய இடத்துக்கு இந்தியா முன்னேற வேண்டும். இதற்கு இந்தியா சுயசார்புடையாக மாற வேண்டும்.
வேளாண்மை, விண்வெளி, சுகாதாரம் உட்பட அனைத்து துறைகளிலும் தன்னிறைவை எட்ட வேண்டும்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.