ஆவின் பால் அட்டையை இணையத்தில் பெறும் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஆவின் பால் அட்டையை எளிதாக பெற்றுக் கொள்ளும் வகையில் ஆவின் இணையதளம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பழைய பால் அட்டைதாரர்களும் புதிய பால் அட்டைதாரர்களும் அனைத்துவிதமான சேவைகளையும் இணையதளத்திலேயே பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
புதிய இணைய முகப்பை முதல்வர் பழனிசாமி விரைவில் தொடங்கி வைக்க உள்ளார். இதன்பிறகு ஆவின் பால் அட்டையை இணைய வழியில் பெற்றுக் கொள்ளலாம் என்று ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.