10 மருந்துகள் தரமற்றவை

10 மருந்துகள் தரமற்றவை என்று மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளை மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்து வருகின்றன. இதில் போலி மருந்துகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த மாதத்தில் 646 மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில் 636 மருந்துகளின் தரம் உறுதி செய்யப்பட்டது. 10 மருந்துகள் தரமற்றவை என்று கண்டறியப்பட்டுள்ளன. இதுகுறித்த முழுமையான விவரங்கள் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியத்தின் https://cdsco.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *