பொய் வழக்கு பதிவு செய்த 3 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு மாநில மனித உரிமை ஆணையம் அபராதம் விதித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடியை சேர்ந்தவர் ஜெயா. ஒரு வழக்கு தொடர்பான விசாரணையில் சப்-இன்ஸ்பெக்டர் அனிதா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கென்னடி, டேவிட் ஜெயசேகரன் ஆகியோர் ஜெயாவை தாக்கியதாகக் கூறப்படுகிறது. அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தை மாநில மனித உரிமை ஆணையம் விசாரித்தது. 3 சப்-இன்ஸ்பெக்டர்களும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஜெயாவுக்கு தமிழக அரசு ரூ.60 ஆயிரத்தை இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த தொகையை 3 எஸ்ஐக்களின் ஊதியத்தில் பிடித்துக் கொள்ளலாம். அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.