கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம்.. 26 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த 26 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க 300-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

அதற்கான கட்டணத்தையும் தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. இதன்படி லேசான அறிகுறிகள் உள்ளவர்களுக்கு நாளொன்றுக்கு அதிகபட்சமாக ரூ.7,500 வரையும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு நாளொன்றுக்கு ரூ.15 ஆயிரம் வரையுமே கட்டணம் வசூலிக்க வேண்டும்.

ஆனால் பல தனியார் மருத்துவமனைகள் பல லட்ச ரூபாயை கட்டணமாக வசூலித்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. 

இதுதொடர்பாக 26 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதில் 8 மருத்துவமனைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுல்ளது. 18 மருத்துவமனைகள் நோயாளிகளிடம் வசூலித்த கூடுதல் கட்டணத்தை திருப்பிச் செலுத்த உத்தரவிடப்பட்டுள்லது. 

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண விவரத்தை தனியார் மருத்துவமனைகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *