தமிழக டிஜிபி சைலேந்திர பாபு கடந்த திங்கள்கிழமை செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார்.
“சமூக வலைதளங்களில் சில அருவருப்பான, அவதூறு செய்திகளை பதிவு செய்து, சட்டம், ஒழுங்கு பிரச்சினையை தூண்டி வருகின்றனர். கடந்த மே முதல் தற்போது வரை மாநிலம் முழுவதும் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பதிவிட்ட நபர்கள் மீது 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பினால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.