ஆக்ஷன் ஹீரோவான சென்னை போலீஸ்

சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன்ரோடு சாரி தெருவைச் சேர்ந்தவர் முகமது இக்பால் ஹக்கீம். இவர், சென்னை கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி ரோட்டில் சென்னை மெடிக்கல் நடத்தி வருகிறார். 3ம் தேதி இரவு 10.30 மணியளவில் கடையை பூட்டி விட்டு முகமது இக்பால் வீட்டுக்குச் சென்றார். 4ம் தேதி கடையில் வேலைப்பார்க்கும் முகமது அன்ஸ் என்பவர் கடையைத் திறக்க வந்தார். அப்போது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்த முகமது அன்ஸ், உரிமையாளர் முகமது இக்பாலுக்கு போனில் தகவல் தெரிவித்தார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த முகமது இக்பால் கடைக்கு வந்து பார்த்தார். அப்போது கல்லா பெட்டியிலிருந்த பணம் ஒரு லட்சம் ரூபாய் கொள்ளைப் போயிருந்தது. இதுகுறித்து முகமது இக்பால், கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் உதவி கமிஷ்னர் ரமேஷ் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாம்வின்சென்ட் வழக்கு பதிவு செய்து விசாரித்தார். மேலும் சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீஸார் ஆய்வு செய்தனர்.

சிசிடிவியில் ஹெலமெட் அணிந்தபடி இளைஞர் ஒருவரும் இன்னொரு இளைஞரும் மெடிக்கல் கடையின் ஷட்டர் பூட்டை உடைக்கின்றனர். பின்னர் கடையிலிருந்த கண்ணாடி கதவை கத்திரிக்கோலால் திறக்க முயற்சி செய்கின்றனர். ஆனால் கதவை திறக்க முடியவில்லை. அதனால் மருந்தை கொடுக்க கண்ணாடியில் இருக்கும் ஓட்டை வழியாக உள்ளே ஒருவன் செல்கிறான். பின்னர் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியில் வரும் அவன், தன்னுடைய கூட்டாளியுடன் அங்கிருந்து தப்பிச் செல்வது பதிவாகியிருந்தது. அதைப்பார்த்த போலீஸார் கொள்ளையர்களைத் தேடிவந்தனர்.

இந்தநிலையில் கொள்ளையர்கள், மந்தவெளி பகுதியில் பதுங்கியிருக்கும் ரகசிய தகவல் இன்ஸ்பெக்டர் சாம்வின்சென்ட் தலைமையிலான போலீஸாருக்கு கிடைத்தது. உடனடியாக அங்கு போலீஸார் சென்றனர். போலீஸாரைப் பார்த்ததும் இரண்டு இளைஞர்கள் கால்வாயில் குதித்து தப்பி ஓட முயன்றனர்.

அவர்களை போலீஸார் விரட்டினர்.கால்வாயில் குதித்த இளைஞர்களைப் பிடிக்க போலீஸாரும் கால்வாயில் குதித்தனர். பின்னர், பிடிப்பட்ட இளைஞர்களை குளிப்பாட்டி, காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர் .விசாரணையில் ஆவடியைச் சேர்ந்த போண்டா ராஜேஷ், மந்தைவெளியைச் சேர்ந்த விஜயகுமார் எனத் தெரியவந்தது. விஜயகுமார், சூப்பர் மார்க்கெட்டில் வேலைப்பார்த்து வருகிறான். இருவர் மீதும் கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களிடமிருந்து பணம், செல்போன்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கால்வாயில் குதித்து கொள்ளையர்கள் தப்பிக்க முயன்றபோதும் தைரியமாக கால்வாயில் குதித்து அவர்களைப் பிடித்த ஆக்ஷன் ஹீரோ போலீஸாரை உயரதிகாரிகள் பாராட்டினர்.

Follow us on :

Tamil Nirubar YouTube Channel : https://www.youtube.com/channel/UCUJKEellp__cXrCcVBtXMeg
Tamil Nirubar Twitter : https://twitter.com/TNirubar
Tamil Nirubar Facebook : https://www.facebook.com/tamil.nirubar.37/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *