நடிகர் ஷாம் நள்ளிரவில் கைது – அடுக்குமாடி குடியிருப்பில் 13 பேரை அள்ளிய போலீஸ்

சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சூதாட்டம் நடப்பதாக நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டிக்கு நேற்றிரவு ரகசிய தகவல் கிடைத்தது. பின்னர் போலீஸார், அந்த அடுக்குமாடிகுடியிருப்புக்குள் நள்ளரவில் நுழைந்தனர். அப்போது குறிப்பிட்ட வீட்டுக்குள் போலீஸார் நுழைந்தனர்.

அப்போது அங்கு சிலர் சூதாட்டம் நடந்துக்கொண்டிருந்தது. உடனே சூதாட்டமாடிக் கொண்டிருந்தவர்களிடம் போலீஸார் விசாரித்தனர். விசாரணைக்குப்பிறகு நடிகர் ஷாம் (42) உள்பட 13 பேரை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரகசிய குறியீடுகள், சீக்ரெட் கோடுகள் மூலம் சூதாட்டம் நடந்தது தெரியவந்தது.

இந்த வழக்கில் நடிகர் ஷாம், அரும்பாக்கத்தைச் சேர்ந்த இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலைப்பார்க்கும் கோபி, புரசைவாக்கத்தைச் சேர்ந்த ஹோட்டல் அதிபர் சித்தார்த் (31), சாஸ்திரிநகரைச் சேர்ந்த சினிமா இயக்குநர் ஆனந்த் (33), குரோம்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் நந்தகிஷோர் (39),

நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த பிசினஸ்மேன் பட்டேல் (26), புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த நடிகர் ஷாம் வீட்டு வேலைக்காரர் வசந்த் (38), வில்லிவாக்கத்தைச் சேர்ந்த நடிகர் ஷாம் வீட்டு வேலைக்காரர் மணி (26), பெரியமேடு பகுதியைச் சேர்ந்த பக்ரூபா (26),

ஷாம்

அடையார் பகுதியைச் சேர்ந்த பிசினஸ் மேன் நசீர் (21), விருகம்பாக்கத்தைச் சேர்ந்த பிசினஸ் மேன் பாலாஜி (33), அண்ணாநகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த இன்ஜினீயர் சைமன் (33), ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த கௌசிக் (30) ஆகிய 13 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். . பின்னர் 13 பேரும் இரவு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *