குட்டி சேதுராமன் பிறந்தான்

தோல் சிறப்பு மருத்துவரான சேதுராமன், திரைப்படத் துறையில் மிகுந்த நாட்டம் கொண்டவர். கண்ணா லட்டு திங்க ஆசையா, வாலிப ராஜா, சக்கை போடு போடு ராஜா, 50/50 ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.


சென்னை ஆழ்வார்பேட்டையில் மருத்துவமனை நடத்தி வந்த அவர் கடந்த மார்ச் 26-ம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது திடீர் மறைவு திரையுலகை மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது.


கடந்த 2016-ம் ஆண்டில் உமையாள் என்பவரை சேதுராமன் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சேதுராமன் மறைந்தபோது அவரது மனைவி கர்ப்பமாக இருந்தார். அவருக்கு கடந்த 3-ம் தேதி அழகான ஆண் குழந்தை பிறந்தது. சேதுராமனே மீண்டும் பிறந்து வந்திருப்பதாக அவரது குடும்பத்தினர் கொண்டாடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *