நடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா

இன்று காலை நடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை அவர் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .

இவர் தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலான திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ளார். 1999 ஆம் ஆண்டில், தமிழ் மொழியில் வெளியான கள்ளழகர் மற்றும் நெஞ்சினிலே என்ற படங்களின் ழுலம் சூட் அறிமுகப்படுத்தப்படடார்.

பின்னர் தெலுங்கு படமான ஹேண்ட்ஸ் அப்! (2000) மற்றும் அவர் மஜூனு (2001) ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

பின்னர் அவர் 2002- ஆம் ஆண்டில் வெளியான ஷாஹீத்-இ-அஸாம் என்ற இந்தி படத்தில் பகத் சிங்காக நடித்துள்ளார்.

கொரோனா காலகட்டத்தில் இவர் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு செய்த உதவிகள் காரணமாக இவர் சமூக வலைதளங்களில் ஒரு ஹீரோவாக புகழப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *