நடிகர் தவசி மரணம்

நடிகர் தவசி மரணம் அடைந்தார்.

தேனி மாவட்டம், கோணாம்பட்டியை சேர்ந்தவர் நடிகர் தவசி (வயது 63). கிழக்கு சீமையிலே தொடங்கி 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தவசி பட்டி தொட்டியெல்லாம் பிரபலம் அடைந்தார். ரஜினியின் அண்ணாத்தே படத்திலும் நடித்திருக்கிறார்.

இதனிடையே புற்றுநோயால் அவர் பாதிக்கப்பட்டார். வறுமையின் காரணமாக உயர்தர சிகிச்சை பெற முடியாமல் தவித்து அவருக்கு மதுரையில் டாக்டர் சரவணன் இலவசமாக சிகிச்சை அளித்து வந்தார். தவசியின் நிலையை அறிந்து நடிகர்கள் பலரும் அவரது மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவியை வழங்கினர்.

திரைப்படங்களில் முறுக்கு மீசையுடன் கம்பீரமாக வலம் வந்த தவசி, மெலிந்த தேகத்துடன் கைகூப்பும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. தீவிர சிகிச்சை அளித்தும் எதிர்பாராதவிதமாக இன்று இரவு அவர் மரணம் அடைந்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *