மகேஷ் பாபுவின் சவாலை ஏற்று மரக்கன்று நட்ட நடிகர் விஜய்

தெலுங்கு திரையுலகின் இளவரசர் என்றழைக்கப்படும் மகேஷ் பாபு கடந்த 1975 ஆகஸ்ட் 9-ம் தேதி பிறந்தார். அவர் கடந்த 9-ம் தேதி தனது 45-வது பிறந்த நாளை கொண்டாடினார்.

சென்னையில் உள்ள வீட்டில் மரக்கன்று நட்ட நடிகர் விஜய்
சென்னையில் உள்ள வீட்டில் மரக்கன்று நட்ட நடிகர் விஜய்

பிறந்தநாளையொட்டி ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டு தோட்டத்தில் மகேஷ் பாபு மரக்கன்று நட்டார். அதோடு நடிகர் ஜூனியர் என்டிஆர், நடிகர் விஜய், நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு ஒரு சவால் விடுத்தார். பசுமை உலகத்தை படைக்க என்னோடு இணையுங்கள் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

சென்னையில் உள்ள வீட்டில் மரக்கன்று நட்ட நடிகர் விஜய்
சென்னையில் உள்ள வீட்டில் மரக்கன்று நட்ட நடிகர் விஜய்

இதை ஏற்று நடிகர் விஜய் இன்று சென்னையில் உள்ள தனது வீட்டில் மரக்கன்றை நட்டார். இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கங்களில் அவர் வெளியிட்டார். அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

சென்னையில் உள்ள வீட்டில் மரக்கன்று நட்ட நடிகர் விஜய்
சென்னையில் உள்ள வீட்டில் மரக்கன்று நட்ட நடிகர் விஜய்

ஜூனியர் என்டிஆரும் நடிகை ஸ்ருதி ஹாசனும் விரைவில் மகேஷ் பாபுவின் சவாலை ஏற்பார்கள் என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இதற்கு முன்பு நாகர்ஜுனா, சமந்தா, ராசி கன்னா, பிரபாஸ் ஆகியோர் பசுமை இந்தியா சவாலில் பங்கேற்று சமூக வலைதளங்களை ஆட்டம் காண வைத்தனர். தளபதி விஜயின் புகைப்படங்கள் இன்னும் சில நாட்களுக்கு சமூக வலைதளங்களை சுனாமியாக சுற்றி வரும் என்பதில் ஐயமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *