தேசிய தலைவர் படத்தில் தேவர் வேடத்தில் நடிக்கும் நடிகர் ஜெ.எம்.பஷீர், தன்னுடைய உடல் நடையை வெகுவாகக் குறைத்திருக்கிறார். அந்தப் புதிய கெட்அப் படத்தில் ஸ்டில்கள் வெளியாகியுள்ளன.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்றை தேசிய தலைவர் என்ற பெயரில் திரைப்படமாக எடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை ஊமை விழிகள், கருப்பு நிலா உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் அரவிந்தராஜ் இயக்குகிறார். முத்துராமலிங்கத் தேவர் வேடத்தில் அதிமுகவின் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார்.

இதற்காக அவர் அசைவ உணவுகளைத் தவிர்த்து விரதம் இருந்தார். இந்தப் படத்தை ஜெ.எம்.பஷீருடன் இணைந்து ஏ.எம்.சௌத்ரி தயாரிக்கிறார்.
முத்துராமலிங்கத் தேவரின் சிறுவயது தோழரான ஏ.ஆர.பெருமாள் தேவர் எழுதிய முடிசூடா மன்னர் பசும்பொன்தேவர் என்ற புத்தகத்தில் அடிப்படையில் இந்தப் படம் எடுக்கப்படுகிறது.

இதில் பிரபலமான சீனியர் நடிகர்கள் நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தில் சூட்டிங் சென்னையில் நடந்துவருகிறது. தேவர் வேடத்தில் நடிக்கும் ஜெ.எம்.பஷீர், தன்னுடைய எடையில் 10 கிலோ வடிர குறைத்திருக்கிறார்.
அவரின் புதிய கெட்அப் போட்டோ ஸ்டில்ஸ்கள் சமீபத்தில் வெளியானது. ஏற்கெனவே தேவர் கெட்அப்பில் இருந்த ஜெ.எம்.பஷீரை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாராட்டியநிலையில் புதிய கெட்அப்பை பார்த்து மீண்டும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன் படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் பாரதிராஜா, சங்கிலிமுருகன், செந்தில் உள்பட சீனியர் நடிகர்கள் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.