நடிகை ஆண்டிரியாவுக்கு கொரோனா

நடிகை ஆண்டிரியாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தென்னிந்திய திரையுலக நட்சத்திரங்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. நடிகர் அல்லு அர்ஜுன், நடிகை பூஜை ஹெக்டே உள்ளிட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளனர்.

https://www.instagram.com/tv/COf_bg1pYj4/?utm_source=ig_web_copy_link

தற்போது தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகை ஆண்டிரியாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதை அவர் இன்ஸ்டாகிராம் வாயிலாக தெரிவித்துள்ளார்.

“கடந்த வாரம் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறேன். வேகமாக குணமடைந்து வருகிறேன். சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலகி இருக்கிறேன். நமது நாடு கொரோனாவால் மோசமான காலத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் என்ன சொல்வது என்பதே தெரியவில்லை.

சில நேரங்களில் இறை அனுபவத்தை உணர சில நொடிகள் மட்டுமே ஆகும். சில நேரங்களில் வாழ்நாள் முழுவதும் தேவைப்படும். வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்.” என்று ஆண்டிரியா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *