அழகு பொம்மை அனு

கேரளாவை பூர்விகமாக கொண்ட அனு இமானுவேல் அமெரிக்காவின் சிகாகோவில் பிறந்து வளர்ந்தவர். கடந்த 2011-ம் ஆண்டில் மலையாள திரையுலகில் அறிமுகமானார். அதன்பிறகு தெலுங்கி திரையுலகில் கால் பதித்தார்.

துப்பறிவாளன் படம் மூலம் தமிழில் அறிமுகமான அனு, நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நங்கூரமிட்டார். தற்போது தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் மகா சமுத்திரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அனு, அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார். அந்த வரிசையில் அவரது புதிய புகைப்படம் இன்ஸ்டாகிராமில் இன்று பதிவிட்டார்.  அதில், கடற்கரை பின்னணியில் அழகு பொம்மையாக அனு பளபளக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *