கொரோனாவுக்கு சீரியல் நடிகை பலியாகி உள்ளார்.
மராத்தி திரைப்படம், சீரியல்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அபிலாஷா பாட்டீல். சில இந்திய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். வெப் சீரியலுக்காக உத்தர பிரதேசத்தின் பனாரஸ் பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பில் அபிலாஷா பங்கேற்றார்.
சில நாட்களுக்கு முன்பு அவர் மும்பைக்கு திரும்பினார். அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மும்பையில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு இன்று அவர் உயிரிழந்தார். அபிலாஷாவின் மறைவுக்கு பாலிவுட், மராத்தி திரைப்பட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.