போதைப் பொருள் விவகாரம்.. 3 நடிகைகளிடம் இன்று விசாரணை…

போதைப் பொருள் விவகாரம்.. 3 நடிகைகளிடம் இன்று விசாரணை…நடத்தப்பட்டுள்ளது.

பாலிவுட்டின் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ம் தேதி மும்பையில் உள்ள வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். நடிகர் சுஷாந்த், நடிகை ரியா சக்கரவர்த்தியை காதலித்து வந்தார்.

நடிகை ரியாவுடன் ரகுல் பிரீத் சிங் (இடது)
நடிகை ரியாவுடன் ரகுல் பிரீத் சிங் (இடது)

நடிகர் சுஷாந்த் பிஹார் மாநிலத்தை சேர்ந்தவர். அந்த மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள போலீஸ் நிலையத்தில் சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் ஒரு புகார் அளித்தார்.

அதில் தனது மகனின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.15 கோடி மாயமாகியுள்ளது. அவரை தற்கொலைக்கு தூண்டியுள்ளனர்” என்று குற்றம் சாட்டினார்.

வழக்கை விசாரித்த பிஹார் போலீஸார், சுஷாந்தின் வங்கிக் கணக்கில் இருந்து சுமார் ரூ.50 கோடியை நடிகை ரியா எடுத்திருப்பதாக பகிரங்கமாக கூறினர்.

சுஷாந்த் கொலை வழக்கில் மும்பை போலீஸாருக்கும் பிஹார் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இறுதியில் வழக்கு விசாரணை சிபிஐ-க்கு கைமாறியது.

நடிகை தீபிகா படுகோன்
நடிகை தீபிகா படுகோன்

இதற்கிடையில் நடிகை ரியா போதை பொருள் பயன்படுத்தியிருப்பதும் நடிகர் சுஷாந்துக்கு போதை பொருள் வாங்கி கொடுத்திருப்பதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக போதை பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரித்து நடிகை ரியாவையும் அவரது தம்பியையும் கைது செய்தனர். போதை பொருள் விவகாரத்தில் இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரகுல் பிரீத் சிங்

நடிகை ரியா அளித்த வாக்குமூலத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளும் போதை பொருள் பயன்படுத்துவதாக கூறினார்.

அதன்பேரில் நடிகைகள் ரகுல் பிரித் சிங், தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோருக்கு போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பினர்.

நடிகை ஷரத்தா கபூர்
நடிகை ஷரத்தா கபூர்

முதல்கட்டமாக நடிகை ரகுல் பிரீத் சிங்கிடம் போதை பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது நடிகை ரியாவிடம் தொடர்பில் இருந்ததாகவும் அவரது போதை பொருள் தனது வீட்டில் இருந்ததையும் ரகுல் பிரீத் சிங் ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இன்றைய விசாரணை

இதைத் தொடர்ந்து நடிகை தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷரத்தா கபூரிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டது.

நடிகை சாரா அலிகானிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது நடிகர் சுஷாந்துடன் தொடர்பில் இருந்ததை அவர் ஒப்புக் கொண்டார். ஆனால் போதை பொருள் பயன்படுத்தியது இல்லை என்று அவர் கூறினார்.

நடிகை சாரா அலி கான்
நடிகை சாரா அலி கான்

இதேபோல நடிகை ஷரத்தா கபூரிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் கூறும்போது நடிகர் சுஷாந்த் போதை பொருள் உட் கொள்வார். நான் போதை பொருள் உட்கொண்டது இல்லை என்று தெரிவித்தார்.

நடிகை தீபிகா படுகோனிடம் 3 கட்டங்களாக விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரது 2 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டு அதில் அழிக்கப்பட்ட தகவல்கள் திரும்ப எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

போதை பொருள் பயன்படுத்தும் பாலிவுட் பிரபலங்கள் தனியாக வாட்ஸ்அப் குழு வைத்திருந்ததாகவும் அந்த வாட்ஸ் அப் குழுவின் அட்மினாக தீபிகா படுகோன் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

எனவே அவரிடம் தீவிர விசாரணை நடத்த போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *